சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது இவருக்கா! குவியும் பாராட்டுகள்! 

0
213

சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது இவருக்கா! குவியும் பாராட்டுகள்!

மாமனிதன் படத்தில் நடித்ததற்காக காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில்  நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் ஜோக்கர் படத்தின் மூலம் புகழ்பெற்ற குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்து சென்ற மே மாதம் திரைக்கு வந்த படம் தான் மாமனிதன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இதில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டு உள்ளன. இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன், பார்த்திபனின் இயக்கத்தில் இரவின் நிழல், சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி, ஆர்.கே.சுரேஷ் நடித்த விசித்திரன், விஜய் சேதுபதி தயாரித்து நடித்த முகிழ், உள்ளிட்ட திரைப்படங்கள் அடங்கும்.

இந்த விழா ஜனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் ஒரு அங்கமாக வாழ்நாள் சாதனையாளர் விருதை  நடிகை அபர்ணா சென் பெற்றார். அடுத்து சிறந்த நடிகைக்கான விருது மாமனிதன் படத்தில் நடித்ததற்காக காயத்ரிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை அபர்ணா சென் நடிகை காயத்ரிக்கு வழங்கினார். மாமனிதன் படத்தில் இரண்டு குழந்தைகளின் தாயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக இந்த விருது காயத்திரிக்கு வழங்கப்பட்டது.

ஏற்கனவே ஈரான் நாட்டில் உள்ள அபதான் என்ற தீவில் இருக்கும் மூவிங் திரைப்பட கல்லூரி விழாவில் மாமனிதன் படம் திரையிடப்பட்டது. இதில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அதே படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகை விருதினை காயத்ரி பெற்றுள்ளார்.

விருதினை வென்ற காயத்ரிக்கு இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் திரைதுறையினரும் ரசிகர்களும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Previous articleமுதல்வரின் அதிரடி உத்தரவு.. அவையை விட்டு வெளியேறிய ஆளுநர்!! இது எதுவும் இங்கு செல்லுபடி ஆகாது!
Next articleமின்வாரிய ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! இதனை செய்ய தடை!