சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!

Photo of author

By Sakthi

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!!

Sakthi

Updated on:

சர்வதேச மல்லர் கம்பம் போட்டி! தமிழகத்திற்கு தங்கம் வென்ற வீரர்!
அசாம் மாநிலத்தில் நடந்து வரும் சர்வதேச மல்லர் கம்பம் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மல்லர் கம்பம் விளையாட்டு வீரர் ஹேமச் சந்திரன் அவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை அளித்துள்ளார்.
சர்வதேச அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகள் அசாம் மாநிலத்தில் கடந்த மே 9ம் தேதி தொடங்கியது. கடந்த மே 9ம் தேதி தொடங்கிய இந்த போட்டி நேற்று வரை அதாவது மே 11ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சர்வதேச அளவிலான மல்லர் கம்பம் போட்டியில் தமழ்நாட்டை சேர்ந்த மல்லர் கம்பம் விளையாட்டு வீரர் தங்கம் வென்று கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த மல்லர் கம்பம் விளையாட்டு வீரர் ஹேமச் சந்திரன் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். சர்வதேச மல்லர் கம்பம் போட்டியில் தங்கம் வென்றது மட்டுமில்லாமல் தேசிய அளவிலான போட்டியில் தங்கமும், கேலோ விளையாட்டு போட்டியில் வெண்கலமும் வென்று சாதனை படைத்துள்ளார்.