சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!!

0
177
#image_title

சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு.முதலிடத்துக்கு முன்னேறினார் ஜோகோவிச் ,2ம் இடத்தில் அல்கராஸ் , சிட்ஸிபாஸ் 3ம் இடம்.

மகளிர் பிரிவில் இஹா ஸ்வியாடெக் முதலிடம்.

சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் மீண்டும் நம்பர் ஒன் இடத்துக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகாவிச் முன்னேறி உள்ளார்.

7 ஆயிரத்து 160 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மியாமி ஓபனில் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால், ஸ்பெயின் இளம் வீரர் அல்கராஸ் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸ் 3ம் இடத்தில் நீடிக்கிறார்.

மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் போலந்து இளம் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் முதலிடத்திலும், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா 2ம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்க வீராங்கனை ஜெஸிகா பெகுலா 3ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

author avatar
Savitha