தொழில்நுட்ப ரீதியாக உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி அடைந்து வருகின்றன.இந்த பட்டியலில் ஆப்ரிக்க நாடான கென்யாவில் பலூன் மூலம் உலகிலேயே முதன் முதலாக இணைய சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் லூனுடன் கென்யாவின் தொலைத்தொடர்பு நிறுவனம் இணைந்து பலூன் மூலம் இணைய வசதியை அங்குள்ள கிராமங்களுக்கு 4ஜி சேவையை அளித்து வரும் இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கென்யாவில் வீசிய புயல் காற்றால் அங்குள்ள தொலை தொடர்பு சேவை பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டது.இதனை அடுத்து 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை இணையதளம் வழியாக இணைக்க பலூன் மற்றும் யு.எஸ் டெலமாக் ஆப்பரேட்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த புதிய முயற்சியால் கென்யாவில் உள்ள ஏராளமான மக்கள் பயன் அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கியுள்ள கிராமங்களுக்கு இந்த பலூன் வழி இணைய சேவை ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.