அதிமுக முக்கிய புள்ளி கொடுத்த பேட்டி.. டென்ஷனான பாஜக!! முதல்வர் வேட்பாளரில் வரும் மாற்றம்??

0
70
Interview where AIADMK gave the main point...Tense BJP!! A change in the Chief Minister's candidate??
Interview where AIADMK gave the main point...Tense BJP!! A change in the Chief Minister's candidate??

ADMK BJP: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதில் கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் எழுந்துள்ளது. பாஜக, 2026 தேர்தலில் வெற்றி பெற்றால் இலை மேல் தாமரை மலரும் கட்டாயம் கூட்டணி ஆட்சிதான் எனக் கூறி வருகிறது. ஆனால் எடப்பாடி இதற்கு முழு மறுப்பு தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி முதல்வர்  வேட்பாளரையும் அறிவித்துவிட்டார். இப்படி இருக்கும் சூழலில் தற்போது அதிமுகவின் அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா அளித்துள்ள பேட்டி சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி யளித்துள்ளார். அதில் கட்டாயம் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது, அதேபோல கூட்டணி குறித்த கேள்விக்கும், கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு என விளக்கம் அளித்தார். வேலுமணி உள்ளிட்டவர்களை வைத்து முதல்வர் வேட்பாளர் நிறுத்தலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாக கேள்விகளை எழுப்பினர்?? இப்படி ஒரு எண்ணம் பாஜகவிடம் இருந்தால் தவிடுபொடி ஆகும் என்று எச்சரித்து பேசினார்.

இவ்வாறு அன்வர் ராஜா பேட்டையளித்தது பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி நிற்கும் நிலையில் அதனை உடனடியாக மாற்ற வேண்டும் என்று பாஜக மத்தியிலிருந்து ஆர்டர் வந்துள்ளதாம். இது ரீதியாக இன்று எடப்பாடி-யிடம் டெல்லி தலைமையே பேச உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அப்படி பாஜக விதிக்கும் கண்டிஷன்களுக்கு எடப்பாடி ஒத்து வரவில்லை என்றால் கட்டாயம் கூட்டணி உடையும் என கூறுகின்றனர்.

Previous articleபெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. வீடு தேடி வரும் ரூ 1000!! கட்டாயம் இதை மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleபிரதீப் ரங்கநாதனுக்கு வந்த வாழ்வு! படம் வெளியாவதற்கு முன்னரே கோடிகளை அள்ளிய படம்!