தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு குறித்து மின்சாரத்துறை அமைச்சர் பேட்டி !!

Photo of author

By Parthipan K

இன்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மின் கட்டண உயர்வு குறித்து திட்டவட்டமாக தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மின்சார கட்டண உயர்வு குறித்தும் , பல்வேறு காரணங்களால் மின்சார கட்டண உயர்வு இருக்குமென தெரிவித்து வந்தனர்.தமிழக மின்சார வாரியம் நட்டத்தில் இருப்பதாகவும், மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பள பற்றாக்குறை இருந்து வருவதாகவும், மின்சார வாரியத்தின் தமிழக அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் என காரணமாக உள்ளதால் மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தயுள்ளதாக ஒரு சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வழங்கி வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் தமிழக அரசு நிறுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் , நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் கூறுகையில், “தமிழகத்தில் எந்த ஒரு காரணத்தினாலும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒருசில ஊடகங்கள் அரசியல் லாபத்திற்காகவும், மற்றும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருவதாக அவர் கூறினார்.மேலும் அமைச்சர் கூறுகையில், “நான் ஏற்கனவே சொன்னது போல தமிழகத்தில் எந்த ஒரு காரணம் கொண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.