நடிகைகளுடன் நெருக்கம்.. ஐஸ்வர்யாவை பிரிந்த நடிகர் தனுஷிற்கு இரண்டாவது திருமணம்?

Photo of author

By Rupa

நடிகைகளுடன் நெருக்கம்.. ஐஸ்வர்யாவை பிரிந்த நடிகர் தனுஷிற்கு இரண்டாவது திருமணம்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்,நடிகைகளின் தொடர் விவாகரத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.ஆனால் நடிகர்,நடிகையை பொறுத்த வரை திருமணம்,விவாகரத்து என்பது சாதாரண ஒரு விஷயமாக மாறிவிட்டது.

திடீர் காதல்,கல்யாணம் சில மாதங்களில் விவாகரத்து என்று தங்கள் திருமண வாழ்க்கையை விரல் விட்டும் எண்ணும் மாதங்களிலேயே முடித்துக் கொள்கின்றனர்.இவர்கள் ஒரு ரகம் என்றால் நீண்ட வருடங்களாக இணைந்து வாழ்ந்து பின்னர் விவாகரத்து பெறும் நடிகர்,நடிகைகள் ஒரு ரகம்.

இதில் இரண்டாவது ரகத்தில் இருக்கும் நட்சத்திர தம்பதி தனுஷ்-ஐஸ்வர்யா.கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்த கொண்ட இவர்களுக்கு யாத்ரா,லிங்கா என்று இரு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழந்து வந்த இந்த தம்பதி கடந்த 2022 ஆம் ஆண்டு பரஸ்பரம் பிரிவதாக அறிவித்து ரசிகர்களையும்,கோலிவுட் வட்டாரத்தையும் அதிர வைத்தது.எப்படியும் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருக்கின்ற குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.இவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் விவாகரத்து கிடைக்க உள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் விவாகரத்து முடிவு வந்தவுடன் தனுஷ்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பம் முடிவு செய்துள்ளதாக பிரபல திரை பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தெரிவித்திருக்கிறார்.நடிகர் தனுஷ் தன்னுடன் இணைந்து நடித்த நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.அதுமட்டுமின்றி அவரின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா அவர்கள் உதவி இயக்குநர் ஒருவருடன் உறவில் இருந்தார் என்றும் இதனால் தான் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்ற தகவல் பரவி வருகிறது.

இவ்வாறு இருக்க திரைத்துறை சாராத தங்கள் சொந்தத்தில் உள்ள ஒரு பெண்ணை தனுஷ்க்கு திருமணம் செய்து வைக்க அவரது அப்பா கஸ்தூரி ராஜா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்திருப்பதாக சபிதா ஜோசப் தெரிவித்திருக்கிறார்.