புதியவகை பாம்பு ரோபோ அறிமுகம்! அவற்றின் பயன்பாடுகள்!
கடந்த மே மாதம் ஹீனான் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம்இடிந்து விழுந்ததில் 23 பேர் கட்டிடடஇடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். மேலும் அதில் ஐந்து நபர்களை மட்டும் மீட்கப்பட்டு. மேலும் உள்ளவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த சம்பவத்தில் 39 பேர் காணாமல் போயிருப்பதாக மீட்பு நடவடிக்கை இயக்குனர் தெரிவித்தார். அதே வேலையில் அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படாமல் அறிவியல் முறையில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கடந்த சில காலமாக சீனா முழுவதும் சுயமாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் உள்ள கட்டப்பட்ட கட்டிடங்களின் இடங்களின் பாதுகாப்பு குறித்து சிறப்பு சோதனை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
மேலும் கட்டிட இடுப்பாடுகளில் மக்கள் சிக்கி கொள்ளும் நிலையானது இந்தியாவிலும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் ஜப்பானில் விஞ்ஞானிகள் ஒரு ரோபோவை உருவாக்கியுள்ளனர் அந்த ரோபோவிற்கு பாம்பு ரோபோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு ரோபோ ஐந்தரை அடி நீளம் மற்றும் பத்து கிலோ எடை கொண்டு பாம்பு வடிவத்தில் இருக்கும். மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ள வரை கண்டறிய இது உதவும் என கூறப்படுகிறது. மேலும் இந்த பாம்பு ரோபோ மக்கள்ளிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.