B.Ed பயிலும் மாணவர்களுக்கு புதிய வழிமுறை அறிமுகம்! ஆசிரியர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை!
அனைத்து கல்வியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில் தமிழகத்தில் பிஎட் படிப்பில் மூன்றாம் பருவத்தில் பயிலும் மற்றும் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் பள்ளிகளுக்குச் சென்று கற்றல் கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர் தற்போது இந்த நடைமுறையை ரத்து பட்டுள்ளதாகவும் கூறினார்கள்.
மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பிஎட் படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் நடப்பு கல்வியாண்டில் 8000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர் பொதுவாக பி.எட் படைப்பில் மூன்றாம் பருவத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று கற்றல் கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ஆனால் இதற்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிஇஓ அலுவலகங்களில் அனுமதி பெற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மேலும் இந்த நடைமுறையில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால் இந்த நடைமுறையை ரத்து செய்து ஆசிரியர் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவு பெற்ற கல்வியல் கல்லூரிகள் 2022 2023 ஆம் கல்வியாண்டில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று கற்றல் கற்பித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சிகளை வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பள்ளிகளின் பட்டியலை பள்ளி கல்வித்துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும் அதன்படி இந்த பட்டியலை தயார் செய்து அந்தந்த கல்லூரிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அதன் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிற்சி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அல்லது பள்ளிகளை அணுக வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.