அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன?

Photo of author

By Pavithra

அறிமுகமானது ஸ்மார்ட் காவலர் செயலி:! இதன் முக்கியத்துவம் என்ன?

காவல் துறையின் செயல் திறனை மேம்படுத்தும் ஸ்மார்ட் காவலர் செயலியை சைலேந்திரபாபு அவர்கள் துவங்கி வைத்தார்.

உலக தரத்திலான தொழில்நுட்பத்தை புகுத்தி காவல்துறையினை நவீனமயமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக காவல்துறையின் செயல்பாட்டை
மேம்படுத்தவும்,ஆவணங்களை பராமரிக்கவும்,குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் சிறப்பாக கையாளவும்,ஸ்மார்ட் காவலர் என்ற புதிய செயலியை சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று சைலேந்திரபாபு அவர்கள் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது.

மேலும் இச்செயலில் காவல்துறையில் களப்பணியாற்றும் காவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும்,திடீரென நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும்,களப்பணியாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ அல்லது உதவிகள் தேவைப்பட்டாலோ உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் வகையிலும் இச்செயலில் ஏதுவாக இருக்கும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இச்செயலியால் காவல்துறை நிர்வாகத்திலும் பொதுமக்கள் சேவையிலும் மையில் கல்லாக அமையுமென்று டிஜிபி அலுவலகம் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும் இந்த செயலியை குறித்து கருத்துகளும் வரவேற்கப்படுகிறது.