நிழலை நம்பி நிஜத்தை இழந்து விடக்கூடாது! அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக சசிகலா கருத்து!

0
157

மிகப்பெரிய எதிர்பார்ப்புகிடையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்றைய தினம் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதேநேரம் கட்சியின் விதிமுறையில் பல திருத்தங்கள் செய்யப்பட்டனர். அதன்படி இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர், உள்ளிட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டனர்.

அதேநேரம் இந்த பொதுக்குழு மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்படி செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தேறியது.

ஆனால் இவ்வளவு பிரமாண்டமான ஏற்பாட்டை செய்துவிட்டு எதற்காக எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக மட்டும் தேர்ந்தெடுத்து விட்டு நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்காமல் விட வேண்டும்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது.

அங்கு தான் எடப்பாடி பழனிச்சாமியின் புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆம் அந்த கட்சியின் நிறுவனர் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் என்று சொல்லப்படும் எம் ஜி ஆர் அந்த கட்சியை தோற்றுவித்த சமயத்தில் இந்த கட்சியின் தலைமைக்கு வருபவர்களை தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவர்களின் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் இந்த கட்சியை வழிநடத்த முடியும் என்ற விதிமுறையை வகுத்து வைத்து சென்றார்.

அதையே தான் அவருக்கு பின்னால் அந்த கட்சியின் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதாவும், கடைபிடித்து வந்தார், அதையேதான் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும், கடைபிடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது.

அதாவது நேற்று இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அடுத்த 4️ மாதங்களில் நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறியிருந்தார்.

அதாவது இந்த நான்கு மாத இடைவேளையில் தொண்டர்கள் மூலமாக தன்னை நிரந்தர பொதுச் செயலாளராக நியமனம் செய்து கொள்ளும் வேலைகளை செய்து முடிப்பார் எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லப்படுகிறது.

அப்படி தொண்டர்களால் அவர் நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் அதன் பிறகு பன்னீர்செல்வம் அல்ல வேறு யார் நினைத்தாலும் அவரை அந்த பதவியிலிருந்து விலக்கி வைக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு அசைக்க முடியாத நடவடிக்கையை மேற்கொள்வதன் முன்னோட்டமாக தான் இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

இந்த நிலையில், பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது, அப்படி இருக்கும் போது இதனை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக் கொள்ள முடியும்? அதிமுகவின் பொதுக்குழு நடந்தது செல்லாது என்று சசிகலா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது அதிமுகவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது. தலைமை பதவியை அடித்து பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது என்று தெரிவித்திருக்கிறார்.

பணம் மற்றும் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அடைந்த எந்த ஒரு பதவியும், நிலைத்திருக்காது. சட்டப்படி செல்லாது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவுடன் நிஜத்தை நிச்சயமாக நாம் அடைவோம் என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும், என்னை தான் ஆதரிக்கிறார்கள் பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க இயலாது. அப்படி இருக்கும்போது இதனை எப்படி பொதுக்குழுவாக ஏற்றுக் கொள்ள முடியும்? அதிமுக பொதுக்குழு நடந்ததை செல்லாது என அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இம்மாதம் அகவிலைப்படி 6% உயர்வு!
Next article‘தி கிரே மேன்’ ரிலீஸ்… ப்ரமோஷனில் தனுஷுக்கு முக்கியத்துவம்… வெளியான மிரட்டலான ஆக்‌ஷன் சீன்!