சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் ஆய்வு
சேலம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில் சேலம் சிவதாபுரம் பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக் கொலுசுகள் தயாரிக்கும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என்று ஆய்வு பணி மேற்கொண்டனர்.
அப்போது சிவதாபுரம் பகுதியில் 18 வயதிற்கும் கீழ் உள்ள இரண்டு குழந்தைத் தொழிலாளர்களை அவர்கள் மீட்டனர்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் குழந்தைத் தொழிலாளர்கள் எவரையும் பணியமர்த்த கூடாது மீறினால் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 50000 அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.