இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!!

0
256
#image_title

இன்று முதல் ஐபோன் 15 விற்பனை துவக்கம்!!! போட்டி போட்டிக் கொண்டு ஐபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள்!!!

இன்று(செப்டம்பர்22) முதல் ஐபோன் 15 அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அதை வாங்குவதற்கு அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் கடையின் வாசலில் குவிந்து ஐபோன் 15-ஐ போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

உலகின் உள்ள ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோன் மாடலான ஐபோன்15 போனை உலகம் முழுவதும் அறிமுகம் செய்யவுள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஐபோன்15 ஸ்மார்ட்போனின் உற்பத்தியை இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய சந்தை மதிப்பை கொண்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்13 மற்றும் ஐபோன் 14 ஆகிய மாடல்களில் பெரிய அளவில் அப்டேட்டுகள் இல்லை என்று ஐபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவலை அடைந்தனர். இதை அடுத்து ஐபோன் 15 ஸ்மார்ட்போனில எதிர்பார்த்ததை விட மாற்றங்கள் அதிகமாக இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் அனைத்தும் பொதுவாக ஒரே வடிவத்தில் தான் வெளியாகும். மேலும் இதில் மிகச் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு தான் அடுத்தடுத்து புதிய ஐபோன்களின் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும். ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 போன் புதிய வடிவத்தையும் புதிய புதிய மாற்றங்களையும் பெற்றிருக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

அது மட்டுமில்லாமல் ஐரோப்பிய யூனியன் சமீபத்தில் எல்லாவகையான சார்ஜ் போடக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களிலும் டைப் சி சார்ஜர் வசதி கெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த அறிவுரைக்கு ஏற்ப ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 மாடலுக்கு லைட்னிங் சார்ஜர் வசதிக்கு பதிலாக டைப் சி சார்ஜர் வசதியை கொடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய மாடல் அறிமுகம் செய்யும் பொழுது அதற்கு முந்தைய மாடலின் விலை குறையும். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோர்13 ஸ்மார்ட்போனின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஆப்பிள் ஐபோன்15 ஸ்மார்ட்போனில் விற்பனை இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய பெரு நகரங்களில் இன்று(செப்டம்பர்22) தொடங்கியுள்ளது. இதையடுத்து ஐபோன்15 ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு இன்று(செப்டம்பர்22) முதல் மும்பையில் உள்ள ஐபோன் ஸ்டோர்களில் அதிகாலை முதலே வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். அதே போல டெல்லியில் உள்ள சிட்டிவால்க் என்ற மாலில் இன்று(செப்டம்பர்22) அதிகாலை முதல் ஆப்பிள் ஐபோன்15 ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

Previous articleவிபத்தில் சிக்கிய காதலனுக்காக காதலி செய்த செயல்!!! காதலியின் செயலால் ஆண்டிப்பட்டியே ஆடிவிட்டது!!!
Next articleசென்னை முதல் நெல்லை வரை இயக்கப்படவுள்ள வந்தே பாரத்!!! இதன் டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா!!?