IPL 2023: கோடிகளுக்கு ஏலம் போகும் 2 இந்திய வீரர்கள்! ஆட்ட நாயகன்களை தூக்க போவது எந்த அணி?

0
204
மனிஷ் பாண்டே,மயங்க் அகர்வால்
மனிஷ் பாண்டே,மயங்க் அகர்வால்

IPL 2023: கோடிகளுக்கு ஏலம் போகும் 2 இந்திய வீரர்கள்! ஆட்ட நாயகன்களை தூக்க போவது எந்த அணி?

இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் 16-வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே இதில் பங்கேற்கும் 10அணிகளுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான வீரர்களின் தேர்வு நடைப்பெற்று பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அடிப்படை தொகை 2-கோடிக்கான பெயர்ப்பட்டியலில்
இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம்
பெற்றுள்ளன. சமீபத்தில் இந்திய மண்ணில் நடந்த டி-20 போட்டியில் கேமரூன் அசத்தி
இருந்தார். மேலும் இவர் வேகத்தில் மிரட்டுவதால் பல அணிகள் இவரை இழுக்க முயற்சி
செய்கின்றன.

அனைத்து அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம்,தக்கவைப்பு,விடுவித்தல் என மொத்தம் 87
வீரர்கள் தேவைப்படுகின்றனர். 30 வெளிநாட்டு வீரர்களும் இதில் அடக்கம். இந்நிலையில்
போட்டியில் விளையாட ஏலத்தில் பதிவு செய்த 991 வீரர்களில் 405 வீரர்களின் அதிகாரப்பூர்வ
இறுதி பெயர்ப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட நிலையில்
இதற்க்கான மினி ஏலம் கொச்சியில் வருகின்ற டிசம்பர்-23 ந்தேதி நடக்க இருக்கிறது. மொத்தம் உள்ள 87 இடங்களுக்கு 405 வீரர்கள் மோத இருக்கின்றனர்.

ஏலத்தில் பதிவு செய்தவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள்,4 பேர்
உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள்.இதில் 119 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய
அனுபவம் பெற்றவர்கள். ஏனையோர் அனுபவம் இல்லாதவர்கள். இங்கிலாந்தின் ஜோ ரூட்டிற்கு அடிப்படை விலை 1 கோடியாக உள்ளது. இதே ஒரு கோடிக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் மனிஷ் பாண்டே,மயங்க் அகர்வால் உள்ளனர்.

அணிகளில் ஹைதராபாத் அணி அதிகபட்சமாக ரூ.42.25, கொல்கத்தா அணி ரூ.7.2
கோடி,பஞ்சாப் அணி ரூ.32.20 கோடி சென்னை அணி ரூ20.45 கோடி செலவிட முடியும்.

Previous articleIPL 2023: பில் சால்டை குறி வைக்கும் சிஎஸ்கே அணி! கலைக்கட்டும் ஐபிஎல் ஏலம்!
Next article‘வாரிசு’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த மாஸ் ஹீரோக்களா ? சுவாரஸ்யமான தகவல்கள் !