IPL 2023: பில் சால்டை குறி வைக்கும் சிஎஸ்கே அணி! கலைக்கட்டும் ஐபிஎல் ஏலம்!
தற்பொழுது நடைபெற போகும் ஐபிஎல் 2023 யின் ஆட்ட நாயகன்களை தேர்வு செய்ய பல அணிகள் நான் நீ என்று போட்டி போட்டு காத்துக் கொண்டுள்ளது. அந்த வகையில் பில் சால்ட் தங்கள் அணியில் கொண்டு வர குறிப்பிட்ட சில அணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் இருந்து உருவான பிரான்சஸ் விளையாட்டு லீக்குகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உள்ளூர் வீரர்கள் இதனை ஈடுகட்ட களத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் சிறந்த வீரராக இருப்பவர்தான் பில் சால்ட். இவர் முதன்முதலாக 2015 கிரிக்கெட்டில் உள் நுழைந்தார்.
மேலும் தற்பொழுது நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்த எதிர்த்து விளையாடும் பொழுது இங்கிலாந்துக்காக 248 ரன்கள் குவித்தார். அதேபோல 2022 ஆம் ஆண்டு அதிகளவு சதம் அடித்து இரண்டாவது இடத்தை தக்க வைத்தார்.
இதனையடுத்து 2022 ஐபிஎல் ளில் சிஎஸ்கே அணியானது நான்கு ஆட்டங்களில் வெற்றியடைந்ததை அடுத்து நிலையற்றதாகவே இருந்தது. அந்த அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும் அதற்கான உரித்த பங்களிப்பை போட்டியில் தரவில்லை.
சென்ற முறை மினி ஏலத்திற்கு முன்பாகவே ராபின் ஊத்தப்பா வெளியேறினார்.அதனையடுத்து சிஎஸ்கே வின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் கெய்வாட் மற்றும் டெவோன் கான்வேஇருந்து வந்த நிலையில், கான்வையின் ஸ்கோர்கள் திருப்திகரமானதாகவும் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகவும் காணப்படவில்லை.
எனவே சென்ற முறை ஐபிஎல் போட்டியில் இது பின்னோக்கி சென்றது. தற்பொழுது பிராவோ பந்துவீச்சு பயிற்சியாளராக களம் இறங்கிய நிலையில் சிஎஸ்கே நல்ல பேட்ஸ்மேன் ஒருவரை தேர்ந்தெடுக்க இருக்கிறது. அந்த வகையில் பில் சால்ட் போல் ஒருவரை விளையாட அனுமதிக்கலாம் என்று கூறுகின்றனர்.