சென்னைக்கு வாய்ப்பே இல்லையா?! அப்போ பெங்களூர் நிலை? சன்ரைசர்ஸ் தோல்விக்காக காத்திருக்கும் DC, LSG! நிலைமை இதுதான்பா!

0
236
வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!
IPL POINT

ஐ.பி.எல். 2024 தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் ஒவ்வொரு அணிகளும் தலா 12 – 13 ஆட்டங்களை ஆடிய பின்பும் இன்னும் பிளே-ஆஃப் செல்லும் அணிகள் உறுதியாகவில்லை என்பது இந்த சீசனுக்கு தனி சிறப்பாக அமைந்துவிட்டது.

இதுவரை 64 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 6 லீக் ஆட்டங்கள் தான் மீதம் உள்ளது. புள்ளி பட்டியலை பொறுத்தவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.

இரண்டாம் இடத்தில உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டது. பிளே ஆஃப் சுற்றுக்கு 3 மற்றும் 4 இடத்திற்கு தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதுவும் வருகிற 18 ஆம் தேதி உறுதியாகிவிடும்.

காரணம் குஜராத், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இந்த அணிக்கு இன்னும் இரு லீக் ஆட்டங்கள் மீதம் உள்ளதால் நிச்சயம் இரண்டில் ஒன்றை வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும்.

அதன்படி பார்த்தால் மீதம் இருக்கும் ஒரு இடத்திற்கு தான் போட்டி, இந்த போட்டியில் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 12 புள்ளிகளுடன் உள்ள பெங்களூர் அணியும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தை வரும் 18 ஆம் தேதி ஆட உள்ளன.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்து, பெங்களூர் அணி 18 ரன்கள் அல்லது 11 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் அபார வெற்றியை பதிவு செய்தால் சென்னை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோய்விடும். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு தான்.

ஒருவேளை சென்னை அணி வெற்றி பெற்றாலோ, அல்லது இந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டாலோ, சென்னை அணி பிளே ஆப் செல்வது உறுதியாகிவிடும்.

மற்றபடி பெங்களூர் அணிக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. இருக்கும் ஒரே வாய்ப்பு (நாக்-அவுட்) சென்னையை நசுக்கி பிழிந்து வீழ்த்தினால் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மீதம் உள்ள லக்னோ, டெல்லி அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா என்றால்? இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நாளை மற்றும் கடைசி லீக் ஆட்டங்களில் மிக மிக மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்தால் டெல்லி அணிக்கு நிச்சயம் வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் நடக்கும் லீக் ஆட்டத்தில் லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பிரமாண்டமான ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

நாளை நடக்கவுள்ள லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுவிட்டால், சந்தேகமே வேண்டாம் லக்னோ, டெல்லி அணிகள் தொடரிலிருந்து தானே வெளியேறிவிடும்.