IPL 2025: 154 ரன்களில் சுருண்ட சிஎஸ்கே அணி! எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்
ஐபிஎல் 2025 தொடரின் 43 வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியின் தொடக்க வீரர் ஷெய்க் ரஷீத் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அயூஷ் பத்ரானா 30 ரன்கள், டிவால்ட் பிரெவிஸ் 28 ரன்கள், சிவம் துபே 17 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 15 ரன்கள், சாம் கரன் 14 ரன்கள் எடுத்தனர்.
தோனி 6 ரன்கள் மட்டுமே எடுத்துத் திரும்பினார். ஹூடா 12 ரன்கள் சேர்த்தார். இதனால் சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஹைதராபாத் பந்துவீச்சில் ஹர்ஷல் படேல் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள், முகமது ஷமி, உனட்கட் மற்றும் கமிந்து மெண்டிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த போட்டி எம்எஸ் தோனியின் 400வது டி20 போட்டியாக இருந்ததால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். 155 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் தற்போது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.