ஐ.பி.எல் ஏலப் பட்டியல் வெளியீடு!! அதிக எண்ணிக்கையில் தமிழக வீரர்கள் பங்கேற்பு!
2023 –ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் விளையாடும் தமிழக வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் 16-வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. எனவே இதில் பங்கேற்கும் 10அணிகளுக்கும் 2023-ஆம் ஆண்டுக்கான வீரர்களின் தேர்வு நடைப்பெற்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம்,தக்கவைப்பு,விடுவித்தல் என மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகின்றனர். 30 வெளிநாட்டு வீரர்களும் இதில் அடக்கம். இந்நிலையில் போட்டியில் விளையாட ஏலத்தில் பதிவு செய்த 991 வீரர்களில் 405 வீரர்களின் அதிகாரப்பூர்வ இறுதி பெயர்ப்பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட நிலையில் இதற்க்கான மினி ஏலம் கொச்சியில் வருகின்ற டிசம்பர்-23 ந்தேதி நடக்க இருக்கிறது.
ஏலத்தில் பதிவு செய்தவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 பேர் வெளிநாட்டு வீரர்கள்,4 பேர் உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள்.இதில் 119 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். ஏனையோர் அனுபவம் இல்லாதவர்கள். இந்த 405 வீரர்களில் 87 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். 2022 –ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடி இருந்தனர். அதிக எண்ணிக்கையில் தேர்வான வீரர்களுள் தமிழகமும் அடங்கும்.
தமிழகம்,தில்லி, கர்நாடகத்தில் இருந்து 13 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக வீரர்களுக்கு தான் அதிக ஏலத்தொகை செலவிடப்பட்டுள்ளது.
ஏலத்தில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்:
1.அஜித் ராம்
2.சந்தீப் வாரியர்
3.எம்.அஸ்வின்
4.என்.ஜெகதீசன்
5.எம்.சித்தார்த்
6.ராக்கி பாஸ்கர்
7.சஞ்சய் யாதவ்
8.அனிருத் சீதாராம்
9.பி.சூர்யா
10.திரிலோக் நாக்
- பாபா இந்திரஜித்
12.ஹரி நிஷாந்த்
13.அஜிதேஷ்
14.சோனு யாதவ்
15.பாபா அபராஜித்
16.சுரேஷ் குமார்
எம்.அஸ்வின்,(மும்பை), சஞ்சய் யாதவ்(மும்பை), என்.ஜெகதீசன் (சிஎஸ்கே), ஹரி நிசாந்த(சிஎஸ்கே), பாபா இந்திரஜித்(கேகே ஆர்) போன்ற வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏலத்தில் பங்கேற்கும் அணிகளில் ஹைதராபாத் அணியிடம் அதிகப்பட்சமாக ரூ.42.25 கோடி தொகை உள்ளது. சிஎஸ்கே அணியிடம் ரூ.20.55 கோடி தொகை உள்ளது.