எங்கள் அணிக்கு எப்போதுமே தோனிதான் கேப்டன்! டிவில்லியர்ஸ் புகழாரம்.!!

Photo of author

By Jayachandiran

எங்கள் அணிக்கு எப்போதுமே தோனிதான் கேப்டன்! டிவில்லியர்ஸ் புகழாரம்.!!

Jayachandiran

அண்மையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு டிவில்லியர்ஸ் பேசியபோது, தான் நிரந்தர ஐபிஎல் அணியை தேர்வு செய்வதை ஒப்புக்கொண்டார். அதில் டிவில்லியர்ஸ் உட்பட நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. தனது அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக் மற்றும் ரோகித் சர்மாவை தேர்வு செய்தார்.

இதையடுத்து அணியின் மூன்றாவது வீரராக பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலிலை தேர்ந்தெடுத்தார். அணியின் முக்கிய இடமான நான்காவது இடத்தில் ஆடுவதற்கு ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய மூவரில் யாராவது ஒருவர் 4வது இடத்தில் ஆடக்கூடும்.

இதன் பின்னர் அணியின் கேப்டனாக தோணியை தேர்வு செய்து 5வது இடத்தை பூர்த்தி செய்தார். இதற்கு அடுத்த இடங்களில் விளையாட ரவீந்திர ஜடேஜா, ரஷித்கான், புவனேஷ்வர்குமார், பும்ரா மற்றும் ரபாடா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் என்னுடைய ஐபிஎல் லெவன் அணிக்கு என்றுமே தோனிதான் கேப்டன் என்பதையும் கூறியுள்ளார்.