இந்த மாதத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும்? மேட்ச்ல நல்ல பர்பாஃர்ம் இல்லனா தோனிக்கு வாய்ப்புகள் கிடைக்காது?

Photo of author

By Jayachandiran

இந்த மாதத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும்? மேட்ச்ல நல்ல பர்பாஃர்ம் இல்லனா தோனிக்கு வாய்ப்புகள் கிடைக்காது?

Jayachandiran

Updated on:

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதன்பின்னர் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்திய காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை. மேலும் செப்டம்பரில் போட்டியை இலங்கை மற்றும் சில குறிப்பிட்ட வெளிநாடுகளில் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகின.

 

இதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து போன்ற நாடுகள் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்திய ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை சுவாரஸ்யத்துடன் எதிர்பார்த்து காத்திருக்க தோனியும் ஒரு காரணமாகும்.


இந்நிலையில் தோனியின் எதிர்கால கிரிக்கெட் பற்றி ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோரை இந்தியா முன்னிலைபடுத்தலாம் மாறாக ஐபிஎல் தோனிக்கு கைகொடுக்க வேண்டும், ஐபிஎல் போட்டிகளில் தோனி ஜொலிக்கவில்லை என்றால் அவருக்கான கதவுகளை இந்தியா மூடிவிடும் என்று கூறியுள்ளார். தோனிக்கு இது ஒரு நல்ல இடைவேளை என்றும், அவர் மீண்டும் வர வேண்டும் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.