ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024!!! புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை நியமித்த ராஜஸ்தான் அணி!!!

0
242
#image_title

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024!!! புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை நியமித்த ராஜஸ்தான் அணி!!!

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டை பூர்வீகமாகக கொண்ட ஷேன் பாண்ட் நியூசிலாந்து அணிக்காக 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை விளையாடினார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷேன் பாண்ட் 2001ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக நியூசிலாந்து அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.

அதன் பின்னர் 2002ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி மூலமாக சர்வதேச ஒருநாள் தொடரிலும், 2005ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டி மூலமாக சர்வதேச டி20 தொடரிலும் அறிமுகமானார்.

மேலும் 2010ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட் நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 18 சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலும், 82 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், 20 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கின்றார்.

அதன் பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஷேன் பாண்ட் 2012ம் ஆண்டு அக்டோபர் நியூசிலாந்து அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். அதன் பின்னர் 2015ம் ஆண்டு நியூசிலாந்து அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் பெட்டிக்குள் நுழைந்து தோல்வியடைந்த பிறகு ஷேன் பாண்ட் அவர்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் பதவியில் இருந்து விலகினார்.

அதன் பின்னர் 2015ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஷேன் பாண்ட் 9 ஆண்டுகளாக சிறப்பான பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மும்பை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஷேன் பாண்ட் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் பயிற்சியாளராக இருந்த இலங்கை அணியின் மலிங்கா ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Previous articleபிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டில் செல்லும் 5 போட்டியாளர்கள்!!! நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்த தகவல்!!! 
Next articleஇந்திய அளவில் டாப் டென் நடிகர் பட்டியல் வெளியீடு!!! நடிகர் விஜய், அஜித், சூர்யாவுக்கு கிடைத்த இடம் என்ன!!?