ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! அறிமுக அணியான லக்னோவை பந்தாடுமா பஞ்சாப் அணி?

Photo of author

By Sakthi

15வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ற மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரையில் 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

அந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் இன்று நடைபெறவிருக்கும் லக்னோவிற்கு எதிரான போட்டியில் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. அந்த ஆட்டத்தில் ஷிகர் தவான் 88 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் நடப்பு தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கின்ற கேப்டன் மயங்க் அகர்வால் மற்ற ஆட்டங்களில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

வலுவான தொடக்கம் கிடைக்க அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டியது மிகவும் அவசியம்.

அறிமுக அணியாக களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. லக்னோ அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், குயின்டன் டி காக், தீபக் ஹூடா, ஸ்டோனிஸ், உள்ளிட்டோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

இந்த இரு அணிகளும் சற்றேறக்குறைய சரி சம பலத்துடன் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு எந்தவிதமான பஞ்சமுமிருக்காது. இரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.