போட்டி சட்டத்தை மீறி நடந்த சமூக வலைதளங்கள்! நாடாளுமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

0
60

நிதி குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது, குழுவின் தலைவரான பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்கா தலைமை தாங்கினார். இந்திய போட்டி ஆணையத்தின் பிரதிநிதிகள் பங்கேற்று சில கருத்துக்களை தெரிவித்தார்கள்.

கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், அமேசான், ஆப்பிள், ஃப்லிப்கார்டு, மேக் மை ட்ரிப், ஸ்விக்கி, சொமாட்டோ உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி சட்டத்தை மீறி நடந்து கொண்டதாக புகார்கள் வந்ததாகவும், அவை தொடர்பாக விசாரிக்க தனிப் பிரிவு அமைந்திருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக நிலைக்குழு விரிவாக விவாதம் செய்தது. அதன்பிறகு கூகுள், பேஸ்புக். ட்விட்டர், அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

மே மாதம் 12ஆம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட கூட்டத்தில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆஜராவார்கள் என்று ஜெயந்த் சின்ஹா தெரிவித்திருக்கிறார்.