ஐபிஎல் போட்டி! கல்கத்தாவை ஓரங்கட்டியது பஞ்சாப் அணி!

Photo of author

By Sakthi

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் தொடங்கிய நாற்பத்தி ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை சந்தித்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

கல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் காலம் புகுந்தார்கள் சுப்மன் கில் 7 பந்துகளை சந்தித்து7ரன்களை எடுத்திருந்த சூழ்நிலையில், ரவி பிஸ்மானிபந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த திரிபாதி தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷுடன் ஜோடி சேர்ந்து அணியின் ரன்னை உயர்த்தினார்.

திரிபாதி இருபத்தி ஆறு பந்துகளை சந்தித்து 34 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார், இருந்தாலும் அதிரடியாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் கடந்தார், அவர் 49 பந்துகளை சந்தித்து 67 ரன்கள் சேர்த்த நிலையில், ரவி பிஸ்மாணி பந்து வீச்சில் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக வந்த நித்திஷ் ராணா 18 பந்துகளை சந்தித்து 31 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

கடைசியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 165 ரன்கள் சேர்த்தது, பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் களம் இறங்கினார்கள்.

இரு தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் மயங்க் அகர்வால் 27 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி 3 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து சக்கரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த நிகோலஸ் புரன் 12 ரன்னிலும், மார்க்ரம் பதினெட்டு இரண்டிலும் ஆட்டம் இழந்தார்கள். ஆனால் இன்னொரு புறம் மிக சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார் 55 பந்துகளை சந்தித்து அவர் 67 ரன்களை சேர்த்தார். கடைசி ஓவரில் வெங்கடேஷ் பந்து வீச்சில் அவர் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியாக மிகவும் அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணியின் ஷாருக்கான் ஒன்பது பந்துகளை சந்தித்து இரண்டு சிக்ஸர்கள் உட்பட 22 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு வழி செய்தார். கடைசியாக பஞ்சாப் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 268 ரன்கள் சேர்த்தது. இதன் மூலமாக கொல்கத்தா அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றியை தன்வசம் ஆக்கியது. அந்த அணியின் சார்பாக வருண் சக்கரவர்த்தி அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன, மாலை மூன்று முப்பது மணி அளவில் ஆரம்பமாகும் 46 வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், டெல்லி அணியும், சந்திக்கின்றன. 11 போட்டிகளில் விளையாடி இருக்கின்ற டெல்லி அணி 8 வெற்றி 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நேற்று நடந்த பஞ்சாப் மற்றும் கல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதை அடுத்து புள்ளிகளின் அடிப்படையில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி அடைந்திருக்கிறது.

இரவு ஏழு முப்பது மணி அளவில் ஆரம்பமாகும் நாற்பத்து ஏழாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் சென்னை அணியும் சந்திக்கின்றன. 16 போட்டிகளில் விளையாடி இருக்கின்ற சென்னை அணி 9 வெற்றி இரண்டு தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது, சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே பகுதியும் பெற்றுவிட்டது.