ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்!

0
422
IPL ticket sales start today! Crowd of fans in Chepakkam stadium!
IPL ticket sales start today! Crowd of fans in Chepakkam stadium!

ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்! சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர் கூட்டம் அலைமோதல்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றார்கள். மேலும் இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் காத்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி டிக்கெட்டுகளை வாங்க அதிகாலையிலேயே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் 1500 முதல் 3000 வரை டிக்கெட்டுகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகின்றது.

சென்னை என் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் பேமென்ட் மற்றும் www.insider in மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள இரண்டு கவுண்டர்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்ய அதிகாலை முதலே காத்துக் கொண்டுள்ளனர்.

Previous articleபக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை!
Next articleரூ 1000 உரிமைத் தொகை இவர்கள் பெற வாய்ப்பில்லை! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!