இஸ்ரேலுடன் ராஜிய உறவு ஒப்பந்தம் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், அதனை வரலாற்றின் சிறப்புமிக்க செயல் என்று அந்த நாட்டு அதிபர்கள் கூறி வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரானோ அந்த ஒப்பந்தத்தின் மூலம் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அதற்கு தயாராக இருக்கவேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுடன் ராஜீய உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா அரபு நாடாகவும், அரபுநாடுகளில் மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தினை சாடிய ஈரான், இது வெட்கக்கேடான செயல், இது நாட்டிற்கு தீமையை தான் வழிவகுக்கும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் இஸ்ரேலுடன் ராஜ்ய உறவானது மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவிற்கு பெரும் செல்வாக்கினை உருவாக்கித் தரும். இது இறுதியில் யுஏஇ விற்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இதனை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமீரகத்தின் இந்த ஒப்பந்தத்தினை கடுமையாகச் சாடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது அரபு நாடுகளை ஆக்கிரமிக்கும் செயலாகவும் மாறும். யுஏஇ இஸ்ரேலுடன் ஒப்பந்தம் மிகப்பெரிய தவறாகும்.
இது குறித்து ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் ஜவாத் சரீப், இஸ்ரேலுடன் ஒப்பந்தமானது வளைகுடா நாடுகளுக்கு செய்யும் துரோகமாகும்.
இதை பாலஸ்தீனத்தினை இஸ்ரேல் ஆக்கிரமிக்கும் செயலுக்கு ஆதரவளிக்கும் நிலை அமீரகத்திற்கு உண்டு என இந்த செயலை ஈரான் அரசு எதிர்த்துள்ளது.