இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்!! எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வெளியுறவுத்துறை!!

Photo of author

By Sakthi

IRAN-ISRAEL:இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

இஸ்ரேல் காசா, லெபனானில் மனித உரிமைகள்  மீறப்பட்டு  அப்பாவி மக்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கொல்லப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஐ நா சபையில் மனித உரிமை மீறல் தொடர்பாக குற்றம் சுமத்டுபட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது மிகப்பெரிய ரானுவத் தாக்குதலை நடத்தப்போவதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

எனவே இஸ்ரேல் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்க யுஎஸ் பி-52 ரக
போர் விமானங்களை ஈரான் எல்லையை நோக்கி நிறுத்தி வைக்கப்பட்டது.  இந்த விமானங்கள் அணு குண்டுகளை வீசும் சக்தி கொண்டது. மேலும்  கடந்த 26-ம் தேதி  ஈரான்  ராணுவத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அத்தாக்குதலில் ஈரானின் எண்ணெய்க் கிணறுகள் மற்றும் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

அமெரிக்காவின் அறிவுறுத்தலால்  அதை கைவிட்டது இஸ்ரேல். இந்த நிலையில் இஸ்ரேல் மீது மீண்டும் பதில் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி எச்சரிக்கை விடுத்து இருப்பது இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையே  போர் பதற்றத்தை  ஏற்படுத்தி வருகிறது.  இவராக போர் நடத்தினால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.