இரவின் நிழல் பற்றி பொய்த் தகவல்களை பரப்புகிறார இயக்குனர்… அமேசான் ப்ரைமில் வந்த தகவல்!

0
110

இரவின் நிழல் பற்றி பொய்த் தகவல்களை பரப்புகிறார இயக்குனர்… அமேசான் ப்ரைமில் வந்த தகவல்!

இரவின் நிழல் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ள நிலையில், படம் பற்றி போலியான தகவல்களை பார்த்திபன் பரப்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இயக்குநரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் தொடர்ந்து வித்தியாசமான படைப்புகளைக் கொடுத்து வருபவர். கடைசியாக அவர் தயாரித்து, இயக்கி நடித்த படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ அவர் மட்டுமே நடித்த படம். இந்த படத்தில், ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே வரும்படி இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

இரவின் நிழல் என்ற படத்தை  உருவாக்கி ரிலீஸ் செய்தார். இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் நான்லீனியர் பாணியில் அமைந்த திரைக்கதையை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளனர். உலகிலேயே இந்த வகையில் அமைந்த முதல் திரைப்படம் இதுதான் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஜூலை மாதம் ரிலீஸான இந்த திரைப்படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த படம் இப்போது அமேசான் பரைமில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதில் படத்தைப் பற்றிய பொதுவான தகவலாக ”இந்த படம் உலகின் இரண்டாவது நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம். ஆனால் படத்தின் இயக்குனர் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்று பொய்யான தகவலாக பரப்புகிறார்” எனக் கூறியுள்ளது.