IRCTC: ஐஆர்டிசி ஆனது மக்களுக்கு தேவையான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி மக்களுக்கு ஏற்றவாறு அதன் தேவைகேற்ப அவ்வப்போது அப்டேட் செய்யவும் படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் பொதுமக்கள் தற்பொழுது புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது டிக்கெட் முன்பதிவு செய்து விட்டால் அதனை வேறு ஒருவருக்கு மாற்ற முடியுமே தவிர்த்து அதற்கு மாறாக வேறு தேதிக்கு மாற்ற இயலாது.
இதனை தற்பொழுது அப்டேட் செய்யும் படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியாத பட்சத்தில் ரத்து செய்ய முடியும். இதன் மூலம் நபருக்கு ரூ 60 என ஐஆர்சிடிசி பிடித்தம் செய்கிறது. அதுமட்டுமின்றி வேறொரு நபருக்கு அந்த டிக்கெட்டை மாற்ற வேண்டுமென்றாலும் அதற்குரிய கடிதம் நகல் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
அதேபோல ஒரு சில ரயில்வே நிலையங்களில் மட்டுமே இவ்வாறு டிக்கெட்டை மாற்றம் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அதனால் இதனை அப்டேட் செய்யும் படி தற்பொழுது பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மக்களுக்கேற்றவாறு பல வசதிகளை தற்பொழுது ரயில்வே துறை சார்பாக செய்துவரும் பட்சத்தில் இதில் மாற்றம் கொண்டு வந்தால் மேற்கொண்டு பயணிகள் பெருமளவில் பயனடைவர் என்று கூறியுள்ளனர். இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக ஐஆர்சிடிசி தரப்பில் பதிலளித்துள்ளனர்.