மே 12ம் முதல் இயங்கவிருக்கும் ரயில் அட்டவணை! பயணிப்பதற்கான விதிமுறைகள் என்ன?
கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.
தற்போது இரண்டாவது முறையாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த மாநிலத்திற்குக் கொண்டு சேர்க்க மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், நாளை (12.05.2020) முதல் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவங்க முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது ரயிலின் வழித்தடங்கள் மற்றும் விதிமுறைகள் வெளியாகியுள்ளன
கீழ்க்கண்ட வழித்தடங்களில் நாளை முதல் ரயில் இயக்கப்படுகிறது:
- புது தில்லி – அகமதாபாத்
- புது தில்லி – சென்னை
- புது தில்லி – செகந்திராபாத்
- புது தில்லி – புவனேஷ்வர்
- புது தில்லி – அகர்தலா
- புது தில்லி – பிலாஸ்புர்
- புது தில்லி – மும்பை
- புது தில்லி – ஜம்மு தாவி
- புது தில்லி – திருவனந்தபுரம்
- புது தில்லி – மாத்கான்
- புது தில்லி – ஹவுரா
- புது தில்லி – பாட்னா
- புது தில்லி – ராஞ்சி
- புது தில்லி – திப்ருகார்
- புது தில்லி – பெங்களூரு
இந்த ரயில்களில் பயணம் செய்வதற்க்கான் விதிமுறைகள்:
- குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மட்டுமே இனைக்கப்பட்டிருக்கும். பிற வகுப்புகள் கிடையாது.
- ராஜதானி கட்டணம் வசூலிக்கப்படும்.
- பயண நேரம் முழுவதும் பயணிகள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் பயணிகள் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன் பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- காத்திருப்பு பட்டியலிலோ, RAC பட்டியலிலோ இடம்பெறும் பயணிகளுக்கு அனுமதியில்லை.
- இணையதளத்தின் மூலமாகவோ, செயலி மூலமாகவோ மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
ரயில் அட்டவணை:
