Media: இர்ஃபான் வெளியிட்ட தொப்புள்கொடி வீடியோவால் மருத்துவமனைக்கு தடைவிதித்த சுகாதாரத்துறை.
உணவு ரிவ்யு செய்து ஊடகங்களில் பதிவிட்டு பிரபலமானவர் இர்ஃபான். இவர் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டு ரிவ்யு செய்து யூ டியூபில் பதிவிடுவார். இவருக்கு யு டியுபில் 4.57 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர் தற்போது நடிகர்கள், அரசியல்வாதிகள் போன்ற மிகவும் பிரபலமானவர்களுடமன் வீடியோ எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு இன்னும் பிரபலமானார்.
ஆனால் இவர் எவ்வளவு பிரபலம் ஆகிறாரோ அந்த அளவிற்கு சர்ச்சையும் சிக்குவார். இதற்கு முன் குழந்தை என்ன பாலினம் என்ன என்பதை குழந்தை பிறக்கும் முன் அறிந்து கொள்வது சட்டப்படி குற்றம் ஆனால் இர்பான் இதை வெளிநாடுகளில் சென்று தெரிந்து கொண்டு அதை என்ன குழந்தை என்று வீடியோ வெளியிட்டார் அப்போது அது மிகவும் அதிக அளவில் பேசுபோருளானது.
அதனை தொடர்ந்து சமீபத்தில் அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது, அதை வீடியோ பதிவு செய்துள்ளார் அதுமட்டுமல்லாமல் குழந்தையின் தொப்புள் கொடியை நான் தான் வெட்டுவேன் என்று அடம் பிடித்து கொண்டு அதையும் அவரே வெட்டிய வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இது சட்ட விதிகளுக்கு எதிரானது என்பது தெரிந்தும் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இது சர்ச்சையான நிலையில் இது தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தொப்புள் கொடியை வெட்ட அணுமதித்த ரெயின்போவ் மருத்துவமனைக்கு 10 நாட்கள் மருத்துவம் செய்ய தடை விதித்தது. மேலும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.ஏற்கனவே இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். புது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.