சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகின்றதா? அப்போ ஆவாரம் பூவை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகின்றதா? அப்போ ஆவாரம் பூவை இப்படி பயன்படுத்துங்க!
ஒரு சிலருக்கு உடலில் நீரின் அளவு குறைவாக இருக்கும். இதன் விளைவாக சிறுநீரானது அடர்த்தியாகி மஞ்சள் நிரத்தில் வெளியேறும். அந்த சமயத்தில் அவர்களுக்கு எரிச்சல், வலி, கடுப்பு ஏற்படும். இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க நாம் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தண்ணீர் குடிக்கும். பொழுது உடலில் நீரின் அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீர் சரியாக வெளியேறும். மற்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. ஆனால் சிறுநீர் எரிச்சல் வந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
சிறுநீர் எரிச்சலை குணப்படுத்த ஆவாரம் பூ மிக சிறந்த மருந்தாக விளங்குகின்றது. இந்த ஆவாரம் பூவுடன் ஒரு சில பொருட்களை சேர்த்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகி விடும். அந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* ஆவாரம்பூ
* தேன்
* பால்
செய்முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் சிறிய பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் பாலை சேர்த்து சூடு செய்ய வேண்டும். பால் லேசாக சூடானதும் பாலில் ஆவாரம் பூவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இது நன்றாக கொதித்த பின்னர் இதை இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பாலில் ஆவாரம் பூவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இறங்கியிருக்கும். இந்த பாலில் தேன் கலந்து குடிக்கலாம். தினமும் காலை மற்றும் மாலை என்று குடிக்க வேண்டும். இவ்வாறு இரண்டு வேலை குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல் சரியாகும்.