கருப்பு பூனை குறுக்கே போன கெட்ட சகுனமா? காரியம் உருப்படாதா? உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Gayathri

இந்திய மக்கள் கலாச்சாரத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.அதேவேளை சில மூடநம்பிக்கைகளிலும் மூழ்கி கிடக்கின்றனர்.நல்ல சகுனம்,கெட்ட சகுனம் பார்ப்பவர்கள் இங்கு ஏராளம்.

காகம் கரைந்தால் சொந்தங்கள் வருவார்கள்,நாய் ஊளையிட்டால் கெட்ட சகுனம்,நரி முகத்தில் முழித்தால் நல்லது என்று பல சகுனங்கள் பார்க்கப்படுகிறது.இதில் முக்கியமான ஒன்று பூனை குறுக்கே போனால் ஆகாது.

அதிலும் கருப்பு நிற பூனை குறுக்கே போனால் என்ன காரியத்திற்காக செல்கிறோமோ அது ஆகவே ஆகாது என்ற மூட நம்பிக்கை மக்கள் இடத்தில் உள்ளது.பூனை குறுக்கே போனால் சிறிது நேரம் அதே இடத்தில் நின்றுவிட்டு தான் நகருவர்.இது உண்மையில் அபச குணமா என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

ஜப்பான்,ஜெர்மனி,பிரிட்டன் போன்ற நாடுகளில் பூனை குறுக்கே சென்றால் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.இதை அதிர்ஷ்டமாக மக்கள் கருதுகின்றனர்.ஆனால் நம் இந்தியாவில் இது கெட்ட சகுனங்களில் ஒன்றாக இருக்கிறது.

சனி பகவானுடன் தொடர்புடையது கருப்பு.இதன் காரணமாகவே கருப்பு நிற பூனை தாங்கள் செல்லும் பாதையில் குறுக்கே செல்வது எச்சரிக்கை போன்றது என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கிறது.ஆனால் இது வெறும் மூடநம்பிக்கை தான்.இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வருவதால் அவை மாற்ற முடியாதவையாக உள்ளது.ஆனால் பூனை உங்கள் பாதையில் வந்தால் அது நல்ல சகுனம் தான்.

வீட்டிற்கு முன் பூனை நடந்து சென்றால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.பூனை உங்களுக்கு பின்னால் சென்றால் அது அதிர்ஷ்டமான ஒன்றாகும்.பூனை உங்களுக்கு நேராக குறுக்கே சென்று திரும்பி பார்த்தால் அது ஆசிர்வாதமாக கருதப்படுகிறது.