நடிகை ஷகீலா இறந்துட்டாங்களா?? அதிர்ந்து போன பிரபலங்கள்!!
நடிகை ஷகிலா இவர் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் இந்திய நடிகை ஆவார். இவர் தனது 15 வயதில் ப்ளே கேள்ஸ் என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். மேலும் இந்த மலையாள திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படத்தின் மூலம் தான் இவர் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இந்தப் படத்தில் நடிகை சில்க் பிரதான கதாபாத்தில் நடிதார். இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் என்னும் மலையாள படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் இவர் நடித்த மலையாள படங்கள் பெரிதும் பேசப்பட்டது வந்தது.
இதை தொடர்ந்து இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மறைந்த நடிகர் விவேக்குக்கு ஜோடியாக மறுமலர்ச்சி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஷகிலாவின் மறு முகத்தை ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தனர்.
அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இதுவரை பார்த்திராத ஷகிலாவை ரசிகர்கள் பார்த்து ஆச்சரியப் பட்டனர். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகிலா அவர்களை பலரும் ஷகிலா அம்மா என்றுஅழைத்து வருகின்றனர். மேலும் இதைப் குறித்து சாக்கிலா அவர்கள் ஒரு பேட்டியின்போது கூறுகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான் எனக்கு பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது என்று கூறியிருந்தார்.
முன்பை விட தற்பொழுது ஷகிலாவுக்கு அதிக ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இப்படி மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் ஷகிலா இறந்துவிட்டதாக ஒரு வதந்தி கிளம்பி வருகிறது. பல நடிகர்கள் ஷகிலாவை நலம் விசாரித்து வருகின்றனர். இது குறித்து ஷகிலா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் நான் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதாகவும் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும், மேலும் இது வெறும் வதந்தி தான் என்றும் கூறியுள்ளார்.
மேலும் எனக்கு தொலைபேசியில் அழைத்து பலர் நலம் விசாரித்து வருகின்றனர் அவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. நான் நலமாக தன் இருக்கிறேன். மேலும் இந்த வதந்தியை கிளப்பி விட்டு அந்த நபருக்கும் நன்றி. ஏனெனில் அவர் கிளப்பி விட்ட வதந்தியால் தான் என்மேல் எத்தனை பேர் அக்கரை வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார்.