நடிகை திரிஷாவிற்கு திருமணமா!!? யாருப்பா அந்த மாப்பிள்ளை!!!

Photo of author

By Sakthi

நடிகை திரிஷாவிற்கு திருமணமா!!? யாருப்பா அந்த மாப்பிள்ளை!!!

Sakthi

நடிகை திரிஷாவிற்கு திருமணமா!!? யாருப்பா அந்த மாப்பிள்ளை!!!

பிரபல நடிகை திரிஷா அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் தாயாக பரவி வருகின்றது. மேலும் மாப்பிள்ளை யார் என்பது குறித்தும் சிறிய தகவல்கள் பரவி வருகின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமைடந்து சினிமாவில் 20 வருடங்களாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் தற்பொழுது நடிகர் விஜய் நடித்துள்ள படம் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் அஜித் நடிக்கவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் நடிகை திரிஷா நடித்துள்ள தி ரோட் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகை திரிஷா அவர்களுக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா அவர்களுக்கு தற்பொழுது 40 வயது ஆகின்றது. ஆனால் இன்னும் நடிகை திரிஷா அவர்களுக்கு திருமணம் நடைபெறாமல் இருக்கின்றது.

ஏற்கனவே நடிகை திரிஷா அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் ரத்தானது குறிப்பிடத்தக்கது. இதனால் திரைப்படங்களில் தீவிரம் காட்டி வரும் நடிகை திரிஷா அவர்களிடம் திருமணம் குறித்த கேள்விகள் கேட்டால் நேரம் வரும் பொழுது நடக்கும் என்று கூறி நழுவிடுகிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா அவர்களுக்கும் மலையாள சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. நடிகை திரிஷா அவர்களின் வீட்டாரும் மலையாள தயாரிப்பாளர் வீட்டாரும் திருமணம் குறித்து பேசி முடிவு செய்து விட்டதாகவும் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகை திரிஷா அவர்களை திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளை குறித்த பெயர் விவரம் எதுவும் வெளியாகவில்லை. மேலும் நடிகை திரிஷா அவர்களின் திருமணம் குறித்து திரிஷா அவர்களின் குடும்பத்தினர் இந்த தகவலை உறுதிபடுத்தவில்லை.