தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு குறித்து பல அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடை மற்றும் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். அதனை சரி செய்யும் வகையில் கொள்முதல் நிலையத்திலிருந்து ரேஷன் கடைக்கும் செல்லும் வாகனங்களுக்கு கட்டுப்பாடு என ஆரம்பித்து நியாய விலை கடையிலிருக்கும் பொருட்கள் கையிருப்பு வரை அனைத்தும் மக்கள் பார்வைக்கு தெரிவிக்கும்படி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்தனர்.
இதன் மூலம் மக்கள் தாங்களிருக்கும் இடத்திலிருந்து நியாய விலைக் கடை இயங்கும் நேரம், நாள் மேற்கொண்டு உள்ளிருக்கும் பொருட்கள் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதற்கு அடுத்தபடியாக ரேஷன் கடையில் பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு உள்ளிட்டவைகள் குறித்து தாங்களே அப்டேட் செய்யும் படி புதிய வெப்சைட் ஒன்றை அறிமுகம் செய்தனர். அதில் மக்கள் ஆன்லைன் மூலம் தங்களின் தேவைகளை அன்றாடம் பூர்த்தி செய்தும் கொள்ளலாம்.
முகவரி மாற்றம் செய்ய விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளமான https://www.tnpds.gov.in/ செல்ல வேண்டும். பின்பு அதில் உள்ள ஸ்மார்ட் கார்டு சேவை என்பதை கிளிக் செய்து தாங்கள் எதை மாற்ற நினைக்கிறீர்களோ அதற்குள் செல்ல வேண்டும். முகவரி மாற்ற வேண்டுமென்றால் அதற்குரிய விவரங்கள் அனைத்தும் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
பின்பு தங்களின் அலைபேசி எண் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்குள் உங்களது ரேஷன் கார்டு அப்டேட் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு எளிமையான முறையில் நீங்கள் ரேஷன் கார்டு குறித்து அனைத்து விவரங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.