பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் எதிர்காலம் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதசை அக்கட்சியினர் அழைக்கின்றனர். அதற்கு காரணம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதாகவும், தமிழக வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர். இப்படி அன்புமணி ராமதாஸ் மீது அளவுக்கடந்த பாசம் வைத்துள்ள பாமகவினருக்கு, நேற்று இணையவழியில் நடைபெற்ற பாமக ஆலோசனைக் கூட்டம் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.
சாதாரன கூட்டம் என்றாலே, தமிழகத்தில் உள்ள அரசியல் பிரச்சனை, கட்சியில் உள்ள உட்கட்சி பிரச்சனை, சுற்றுச்சூழல் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகளையும் எடுத்துப் பேசி, அவற்றை தவிர்ப்பது எப்படி என்பதற்கான வழிமுறைகளையும் கூறுவதே அன்புமணியின் வாடிக்கை. அதிலும், அவர் பேச ஆரம்பித்தால், நேரம் போனது கூட தெரியாமல், யாரும் இருக்கையில் இருந்து நகராத அளவுக்கு தரவுகள் இருக்கும். ஆனால், நேற்று நடந்த கூட்டத்தில் தலைகீழாக மாறியது.
பார்க்கவே உடல்நிலை சரியில்லாத்து போன்று அன்புமணி ராமதாஸ் காணப்பட்டார். கத்தி போன்று வீசும் அவரது பேச்சு நேற்று சுனக்கமாகவே இருந்தது. தரவுகளை வைத்துக் கொண்டு, பிரச்சனைகளையும் தீர்வுகளையும் மணிக்கணக்கில் பேசும் தன்மை கொண்ட அவர், நேற்று 10 நிமிடம் கூட பேசவில்லை என்பது பாமகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தேர்தலுக்கு 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இணையவழி கூட்டத்தில் நிர்வாகிகளை ஊக்குப்படுத்தும் வகையில் அவர் பேசினாலும், அவரது பேச்சைக் கேட்க காத்திருக்கும் தொண்டர்களிடையே இது அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது.