அனுஷ்கா படத்திற்கு OTTல் இவ்வளவு விலையா? அதிர்ந்த மற்ற நடிகைகள்!

0
211

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் அருந்ததி என்ற படத்தின் மூலம் பெரும் பெயர் பெற்றார். சமீபகாலமாக பல படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவரது படங்களுக்கு எப்பொழுதுமே ஏகப்பட்ட வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்று பல நாயகிகள் கதையின்  மெயின்கேரக்டரில் நடிப்பதற்கு வித்திட்டவர்  அனுஷ்காவே ஆவார். அவர் நடித்த அருந்ததி படம் அவ்வளவு எளிதில் எவராலும் மறக்க முடியாத ஒரு படம் ஆகும்.

தற்போது இவர் மீண்டும் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அந்தப் படத்தினை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய கையை கொடுத்து வாங்கியுள்ளது என்ற செய்தி பரவி வருகிறது.

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி போன்ற நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் சைலன்ஸ். இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்பட உள்ளது.

இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டி இருந்தது.ஆனால் கொரோனா பேரிடர் காரணமாக தற்போது இது அமேசான் நிறுவனத்திற்கு கை மாற்றப்பட்டுள்ளது.இந்த படத்தை அமேசான் நிறுவனம் 20 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்த விலையில் கால்வாசி கூட வாங்காமல் ஜோதிகா,கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் படங்கள் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.அனுஷ்கா படத்திற்கு OTTல் இவ்வளவு விலையா? அதிர்ந்த மற்ற நடிகைகள்!

திரையரங்குகள் மூடியுள்ள மார்க்கெட் இல்லாத இந்தக் கடினமான நேரத்தில் கூட அனுஷ்காவின் மாஸ் கண்டு மற்ற நடிகைகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

Previous articleஅதிரடி ஆஃபர் கொடுத்த OTT ! அதிர்ந்துபோன தியேட்டர்காரர்கள் !
Next articleஇணையத்தில் வைரலாகும் சியான் வாரிசின் புகைப்படம்! சின்ன சியான் என்று புகழும் நெட்டிசன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here