TVK: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து நாட்டில் நடக்கும் அவலங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் எதிராக குரல் கொடுத்து மக்கள் ஆதரவை திரட்டி வருகிறார். 2026ஆம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி கடைசி நேரத்தில் அதிமுக மற்றும் பாஜகவின் கூட்டணியில் சேர்ந்து திமுகவிற்கு எதிராக ஒரு அணியை உருவாக்கி தேர்தலை சந்திப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் அனுதினமும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தவெகவை சேர்ந்த நிர்வாகிகள் இதனை மறுத்து வந்தனர். எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆனால் விஜய் இதுவரை இந்த விஷயம் பற்றி பேசாமல் மௌனம் காத்து வந்தார். அதிமுக மற்றும் பாஜக கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்கள் நேரடியாகவே தவெகவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்தனர். துணை முதல்வர் பதவி 50 முதல் 80 சீட் வரை தருகிறோம் என்று பேரம் பேசினர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பாஜக பற்றிய தனது நிலைப்பாட்டை தொண்டர்கள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார். கொள்கை ரீதியான எதிரிகளுடன் தவெக எப்போதும் கூட்டணி வைக்காது. அரசியல் சுயலாபத்திற்காக கூடி குலைந்து கூட்டணி வைத்துக்கொள்ள இது ஒன்னும் திமுக அதிமுக கிடையாது. நாங்க தவெக கட்சி.
பெரியார், அண்ணா போன்ற தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த தலைவர்களை இழிவுபடுத்தி பேசும் பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது. மதவாத பிரிவினையை தமிழ்நாட்டில் ஏற்படுத்தலாம் என்று பாஜக நினைக்கிறது. பாஜகவின் இந்த எண்ணம் எப்போதும் தமிழ்நாட்டில் பழிக்காது என்று பாஜகவை கடுமையாக விமர்சித்து எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் விஜய்.