ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு பாஜக காரணமா? அண்ணாமலைக்கு பொன்னையன் குட்டு!
நடந்து முடிந்த ஈரோடு இடைதேர்தலில் அதிமுக தோல்விக்கு பாஜகவுடனான கூட்டணி தான் காரணம் என்று, அதிமுக முன்னணி தலைவர்கள் கூறிவந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறிய கருத்துகள் தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காமல் சற்று சறுக்கிய நிலையில், தேர்தலின் போது கூட்டணி கட்சிகள் நல்லமுறையில் ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அதிமுகவின் நிலைப்பாடு வேறு, கூட்டணி கட்சியான பாஜகவின் நிலைப்பாடு என்பது வேறு, அதிமுக என்னும் மாபெரும் இயக்கமானது சாதி, மதம், இவைகளுக்கு அப்பாற்பட்டு யாராக இருப்பினும் அவர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும், அவ்வாறான நிலைப்பாட்டில் உள்ளவர்தான் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்றும், பாஜக வேறு நாங்கள் வேறு என்பதை மக்கள் கொஞ்சம் கொஞ்சம்மாக புரிந்து கொண்டு வருகின்றனர் .
அதே போல பாரத பிரதமர் மோடி சிறந்த முறையில் ஆட்சி நடத்துகிறார். பாஜக உட்கட்சி பிரச்சனையை தேடி ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை,அவர்களாகவே அதிமுகவில் சேர்கின்றனர். மோடியின் திறமைமிக்க ஆட்சிக்கு நாங்கள் எப்போதுமே வரவேற்ப்பு அளிப்போம், அதே சமயத்தில் தமிழ்நாட்டின் நலனுக்கு பாஜக எதிராக செயல்பட்டால் அதை முதலில் எதிர்ப்பது அதிமுகதான் என்பதை பாஜக மறந்துவிடக்கூடாது, பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை ஒன்றும் அகில இந்திய தலைவர் போல பேசக்கூடாது.
எங்கள் கட்சியை வளர்ப்பது பற்றி எங்களுக்கு அண்ணாமலை அறிவுரை கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், அவரது கட்சியை அவர் வளர்க்க முயற்சி செய்யட்டும், அவர் எப்படி செயல்படுகிறார் என்று கண்டுகொள்ளும் அவசியம் தங்களுக்கு இல்லை,எங்களுக்கு 95.5 சதவிதம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதை அண்ணாமலை புரிந்துகொள்ளவேண்டும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு உள்ளதாக அவர் கூறியிருந்தால் அதனை சற்று யோசித்து பேச வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது எத்தனை சதவிதம் வாக்குகள் மற்றும் தொகுதிகள் பாஜக பெற்றது என்றும், அண்ணாமலைக்கு நன்றாகவே தெரியும் என்றும், எனவே அதிமுகவின் நிலைப்பாடு வேறு, பாஜக நிலைப்பாடு வேறு என்பதை அண்ணாமலை நன்கு உணர வேண்டும் என்று அண்ணாமலைக்கு குட்டு வைத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்.