கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியா? கட்சியினரிடையே பரபரப்பு!
தி.மு.க. எம்.பி மகளிரணி செயலாருமான கனிமொழி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று பம்பரமாக சுழன்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் சுழற்சி முறையில் சுழன்று மீண்டும் நம்மிடையே வருகிறது.தமிழகத்தில் சுமார் ஐந்து மாதங்களுக்கு பிறகு தினமும் 3000-க்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
சென்னையில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டு கொரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு நிகழ்த்தப்படுமோ என்கிற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர்.இதை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருவதால் அவர்களையும் கொரோனா தொற்று தாக்கி வருகிறது.
தே.மு.தி.க.வின் எல்.கே.சுதீஷ், மக்கள் நீதி மய்யம், தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. எம்.பி.யும் மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தான் வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் நான் நாலமாக இருக்கிறேன் என்றும் விரைவில் குணமடைவேன் என்றும் கூறினார்.