அஜித்திற்கு வில்லனாகும் தனுஷ் ? ‘ஏகே 62’ படத்தின் லேட்டஸ்டான அப்டேட் !

Photo of author

By Savitha

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகர்கள் மற்றொரு முன்னணி நடிகரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பது அல்லது வில்லனாக நடிப்பது போன்ற கான்செப்ட் ட்ரெண்டாகி வருகிறது, இதனை ரசிகர்களும் விரும்பி வரவேற்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். ‘கடல்’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்தது, ‘தனி ஒருவன்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களில் ஜெயம் ரவிக்கு, அரவிந்த் சாமி வில்லனாக நடித்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்றியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதேபோல விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பது ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது.Ajith's Charisma is Mind-Blowing: Dhanush

‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தது நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்துவரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் தனுஷ் வில்லனாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் அவர் வில்லனாக நடிக்கப்போவது நடிகர் அஜித்திற்கு என்கிற விஷயம் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பில் மூழ்க செய்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போகும் ‘ஏகே 62’ படத்தில் தனுஷை வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தனுஷ் ஒத்துக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.