திமுக பாஜக வின் கைக்குள் செல்கிறதா? கு.கசெல்வத்தை தொடர்ந்து மேலும் ஒரு திமுக எம்.பி பாஜகவில் இணைகிறார்?

Photo of author

By Parthipan K

திமுக பாஜக வின் கைக்குள் செல்கிறதா? கு.கசெல்வத்தை தொடர்ந்து மேலும் ஒரு திமுக எம்.பி பாஜகவில் இணைகிறார்?

Parthipan K

கடந்த சில நாட்களாகவே திமுக மற்றும் பாஜக பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் வருகின்ற காரணத்தினால் இது போன்ற இழுபறிகள் நிகழ்வது சாதாரணம் தான்.

அண்மையில் திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க செல்வம் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாகின. மேலும் அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன், கட்சி மாறப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், தான் பாஜகவின் பிரதமரை சந்தித்ததாகவும் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர்.

இது குறித்து பதிலளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன், “நான் திமுகவில் இருப்பதனால் எந்த ஒரு அதிருப்தியும் எனக்கு இல்லை, நான் தனியாக பிரதமரை சந்திக்கவும் இல்லை.
மேலும் இது குறித்து வதந்திகளை சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவார்களுக்கெல்லாம் நான் பதில் கூற முடியாது” என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகன் தன்மீது எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர் தெரிவித்துள்ளார்.