வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்!

Photo of author

By Mithra

வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக பரப்புரை? கடுப்பில் நிர்வாகிகள்!

வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் 6 கட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு உட் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. இதையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக குழுவுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள் ஒதுக்கீட்டை உறுதி செய்தி செய்தனர்.

தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும், சீர்மரபினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்காகவும் சட்ட முன்வரைவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) என்ற பிரிவை மூன்றாக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (வன்னியர்) MBC(V) என்ற பிரிவுக்கு 10.5%, சீர்மரபினருக்கு 7%, மற்றவர்களுக்கு 2.5% என பிரிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, திமுகவினர் மாறிமாறி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்துக்களை பரப்பினர். குறிப்பாக அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் திமுக ஆதரவு ஊடங்கள், எதிரான கருத்துக்களை தேடித்தேடி சில நபர்களை பேச வைத்தன. அதே போன்று, விவாதங்களில் பங்கேற்றவர்களும், உள் ஒதுக்கீடு சாத்தியமில்லை, இது சட்டப்படி செல்லுபடி ஆகாது என்றெல்லாம் பேசினர். இதுவே திமுகவில் உள்ள வன்னியர் நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்தது.

அதே நேரத்தில், பொதுவாக கருத்து ஏதும் தெரிவிக்காத திமுகவின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்தில் உள் ஒதுக்கீடு வழங்கியது உள்நோக்கம் உள்ளது, இப்போது வழங்கியிருக்கக்கூடாது என்ற தோணியில் கூறியிருந்தார்.

ஆனால் உண்மையில், 2012ஆம் ஆண்டு அரசு அமைத்த ஜனார்த்தனம் ஆணையம் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்ததையே, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டப்படி இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும், தடை செய்ய முடியாது என தெரிந்தும், மக்கள் மத்தியில் ஊடகங்கள் வாயிலாகவும், தனது ஆதரவு பேச்சாளர்கள் மூதலமாகவும், வன்னியர் உள் ஒதுக்கீட்டை எதிர் கருத்துக்களை பரப்பி வருவதால் திமுக வன்னியர்கள் கடுப்பில் உள்ளனர்.