மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா?

Photo of author

By Savitha

மீனாட்சி அம்மன் கோவிலின் தங்கத் தாமரையை செய்தவர் இவரா?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை மிகவும் பிரபலமானது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட ஆச்சரியப்பட வைப்பது குளத்தில் இருக்கும் தங்கத் தாமரை தான்.
அத்தகைய தாமரையை வடிவமைத்தவர் யார் என்பது குறித்து பார்க்கலாம்:
ஓவியம், சிற்பம் என பாரம்பரியமான குடும்பப் பின்னணியில் வந்தவர்  என்.எஸ். சபாபதி என்னும் ரத்தின சபாபதி. இவர் தான், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தில் இருக்கும் தங்கத் தாமரையை வடிவமைத்தவர்.  ‘இன்மையில் நன்மை தருவார் ஆலயம்’ உள்ளிட்ட பல ஆலயங்களில் இவர் வரைந்திருக்கும் தெய்வீகச் சுவரோவியங்கள் இடம் பெற்றுள்ளன.
மதுரையில் பிறந்து வளர்ந்த சபாபதி ஓவிய ஆர்வத்தால் குருமார்களைத் தேடிச் சென்று பாரம்பரிய குரு சிஷ்ய முறைப்படி உடனிருந்து சேவை செய்து ஓவியம் கற்றார். கோவில் கட்டடக் கலை, தஞ்சை ஓவியம், சுதைச் சிற்பம் பயின்றிருகிறார். வெண்பாக்கள், குறள் போன்ற ஈரடி புதுக் குறள்களையும் ஓவியர் சபாபதி எழுதியுள்ளார்.
ஆன்மீகத்தில் பெரிதும் நாட்டம் கொண்ட சபாபதி கடவுள் சிலைகளை செய்வதிலும்,  கடவுள் ஓவியங்களை வரைவதிலும் கைத்தேர்ந்தவர்.அவர் உருவாக்கிய பல்வேறு தெய்வ சிலைகளும், தெய்வங்களின் ஓவியங்களும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் வைக்கப்பட்டுள்ளன.
என்ன தான் நவீன ஓவியங்கள் இருந்தாலும், கணினியில் சாப்ட்வேர் மூலம் ஓவியங்களை வரைந்தாலும் கைப்பட நாம் வரையும் ஓவியங்களுக்கு என்றும் மதிப்பு குறையாது மதிப்புக்கூட தான் செய்யும் என்பதற்கு மதுரை ஓவியர் சபாபதி அவர்கள் ஓர் உதாரணம்.