இடுப்பு வலி என்பது ஆண்களையும், பெண்களையும் இன்று பாடாய்ப் படுத்தி வருகிறது. பெண்கள் வீட்டில் சிறிது கடினமான வேலைகளை செய்து விட்டாலே இடுப்பு வலி ஆரம்பித்து விடுகிறது. குனிந்தால் நிமிர முடியவில்லை என்ற பிரச்சனையும் ஏற்பட்டு விடுகிறது. ஆண்களுக்கும் அதிகமான நேரம் வாகனங்களை ஓட்டும் பொழுது இடுப்பு வலி ஏற்படுகிறது. அன்றைய காலங்களில் 80 அல்லது 90 வயது ஆனாலும் கூட எந்த வலியும் இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தனர். ஆனால் இந்த காலகட்டத்தில் இளம் வயதிலேயே இடுப்பு வலி, கால் வலி, மூட்டு வலி என பலவிதமான வலிகள் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு முக்கியமான காரணம் நமது உணவு முறைதான்.
இந்த இடுப்பு வலிக்கு ஒரு நல்ல மருந்தாகவும், வலுவை தரக்கூடியதாகவும் இருப்பது நாம் பயன்படுத்தக்கூடிய உளுந்து தான். இந்த உளுந்தினை கலி செய்து சாப்பிடுவதன் மூலம் நமது இடுப்பு வலிக்கு ஒரு நல்ல மருந்தாக மாறும். வெள்ளை உளுந்தை காட்டிலும் கருப்பு உளுந்து மிகுந்த சத்துக்கள் நிறைந்தது. உடல் பருமன் அதிகரிக்க வேண்டும் என்றாலும் இந்த உளுந்தினை நாம் தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம். உளுந்தினை அரைத்து ஷாம்புவிற்கு பதிலாக இதனை தேய்த்துக் குளிக்கலாம். இதனால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி ஏற்படும்.
பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த உளுந்தினை அதிக அளவில் எடுத்துக் கொள்வது பல நன்மைகளை தரும். எலும்பு முறிவு ஏற்பட்டவர்களும் உளுந்தினை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் உளுந்து எண்ணெய் விற்கப்படும் அதனை கை, கால் வலிகளுக்கு பயன்படுத்தலாம். ஆண்மை குறைவு இருப்பவர்களும் உளுத்தம் கஞ்சி அல்லது உளுந்து களியினை சாப்பிட்டு வரலாம்.
இடுப்பு வலிக்கு உளுந்து களி எவ்வாறு செய்ய வேண்டும் என்றால் தேவையான அளவு உளுத்தம் பருப்பினை எடுத்து நன்றாக வறுத்து அதனை அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவினை சலித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணையை ஊற்றி அதில் அரைத்து வைத்த உளுந்து மாவினை போட்டு நன்றாக கிண்டி விட வேண்டும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேங்காயை துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கலி நன்றாக வெந்து பதத்திற்கு வந்தவுடன் அதனை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும்.
இந்த காலத்தில் 30 வயதை தாண்டினாலே ஜவ்வு தேய்மானம், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது. இந்த பிரச்சனைகள் இல்லாவிட்டாலும் கூட உளுந்தினை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொள்வது மிகவும் நன்மை வாய்ந்தது.