அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்க இருந்த இளையராஜாவின் பயோபிக் கைவிடப்பட்டதா!!

Photo of author

By Gayathri

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக்க இருந்த இளையராஜாவின் பயோபிக் கைவிடப்பட்டதா!!

Gayathri

Updated on:

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக இளையராஜா என்ற பெயரில் உருவாக்க சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை இளையராஜா மற்றும் கனெக்ட் மீடியா இணைந்து தயாரிக்க உள்ளதாகவும், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் எடுக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மேலும், இந்த திரைப்படத்தின் திரைக்கதையை அமைக்கும் நோக்கில் இயக்குனர் இளையராஜா உடனும் அவரின் நண்பர்களுடனும் பழகி கதைக்க தேவையான தகவல்களை சேகரித்து வந்தார்.

இவை மட்டுமின்றி, இளையராஜாவின் சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள மனிதர்களிடமும் பழகி நிறைய தகவல்களை சேமித்து அதன் மூலம் திரை கதையும் அமைக்கப்பட்டது. இந்த திரை கதையை எஸ் ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு சீக்கிரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படமே கைவிடப்பட்டது என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

ஆனால் இந்த செய்தியின் உண்மை தன்மை மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் விரைவில் இது குறித்த தெளிவான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.