இஸ்ரோ தனியார்மயமாக்க படுகிறதா?
இந்தியாவில் மத்திய அரசு தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ , தற்போது தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனியார்மயமாக்கப்படுகிறதா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
இதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி தலைவரான சிவன் கூறுகையில்,தனிநபர்கள் விண்வெளி சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்கவும் ,அதன் மூலம் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தை அடையவும் மட்டுமே தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இஸ்ரோ நிறுவனமானது தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் ,தனது வளர்ச்சிகளை சிறப்பாக பயன்படுத்துவது முயற்சியே தவிர கண்டிப்பாக இஸ்ரோ தனியார் மயமாக்கப்படாது என்று கூறினார்.விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
சமீபத்தில் அமெரிக்க நிறுவனமான நாசா ,விண்வெளிக்கு தனியார் மயமாக இருந்த டெஸ்லாவின் நிறுவனத்துடன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.