மச்சம் என்பது ஒரு சிலரிடம் அதிகமாக இருக்கும் அதுவே ஒரு சிலரிடம் குறைவாக மட்டுமே இருக்கும். அதே சமயம் சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். மச்சம் என்பது எந்த இடத்தில் இருந்தால் எந்த விதமான பலன்களை தரும் என்பது குறித்தும், அது ஆண் மற்றும் பெண்களுக்கு இடையே எந்த விதமான வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும், மச்சத்தினால் ஏற்படக்கூடிய அதிர்ஷ்டம் குறித்தும் காண்போம்.
ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உச்சந்தலையில் மச்சம் இருந்தால் தொடர்ந்து மேன்மையை அடைப்பவர்கள் ஆகவும், தீர்க்கமான முடிவுகளை எடுப்பவர்களாகவும் இருப்பர். நெற்றியில் எந்த பக்கம் வேண்டுமானாலும் மச்சம் இருந்தால் அவர்கள் நேர்த்தியாக உழைத்து வெற்றி என்பதனை தக்க வைத்துக் கொள்பவர்களாக இருப்பர். கண் புருவத்திற்கு கீழ் மச்சம் இருந்தால் அவர்கள் வசிய சக்தி அதிகம் உள்ளவர்களாகவும், இவர் கூறுவதை மற்றவர் ஏற்றுக் கொள்ளும் விதத்திலும் இருப்பார்கள்.
உதட்டுக்கு மேல் மச்சம் இருந்தால் அவர்கள் முதலில் ஏழ்மையில் இருந்தாலும் திடீரென அவர்களுக்கு மேன்மையை தரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் சொந்த பந்தங்களின் முன்னால் பெருமையான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள்.
கழுத்து தாடையில் மச்சம் இருந்தால் திரை உலகிலும், கடல் கடந்து செல்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மார்பின் மீது மச்சம் இருப்பவர்கள் எந்த ஒரு இடத்திலும் தனி ஒருவராக நின்று ஜெயித்து காட்டுபவர்களாக இருப்பார்கள். வயிற்றுப் பகுதியில் மச்சம் இருப்பவர்கள் உணவுப் பிரியர்களாக இருப்பார்கள். உணவை ரசித்து ருசித்து உண்பவர்களாக இருப்பார்கள். இடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் எவ்வளவு வயதானாலும் கூட இளமை தோற்றத்தையே கொண்டிருப்பார்கள்.
தொடை பகுதிகளில் மச்சம் இருந்தால் அவர்கள் இன்பமான வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள்.
முழங்கால் பகுதியில் மச்சம் இருப்பவர்கள் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். முழங்காலுக்கு கீழே மச்சம் கொண்டவர்கள் வீரமுடையவர்களாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பாதம் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் இன்பமும் துன்பமும் கலந்த ஒரு வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள். உள்ளம் பாதத்தில் மச்சம் கொண்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தரித்திரம் உடையவர்களாக இருப்பார்கள்.
அது முடிந்த பிறகு சரித்திரம் படைப்பவர்களாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேற்கூறிய பலன்கள் அனைத்தும் பெண்களுக்கு இடப்பக்கமாக மச்சம் இருந்தால் அதிர்ஷ்டத்தை தரும். அதே போன்று ஆண்களுக்கு வலப்பக்கமாக மச்சம் இருந்தால் அதிர்ஷ்டத்தை தரும்.