பொதுவாக பூஜை அறையை நாம் எவ்வாறு பராமரிப்பது? பூஜை அறையில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து அனைவரும் ஓரளவுக்கு அறிந்திருப்போம். ஆனால் நமது வீட்டு பூஜை அறையில் நான்கு முக்கிய பொருட்களை அன்றாடம் மாற்றி விட வேண்டும் என்பது குறித்து ஒரு சிலர் அறியாமல் இருப்போம். அது என்னென்ன என்பது குறித்து ஒரு 4 விஷயங்களை பார்ப்போம்.
நெய்வேத்தியம்: நமது வீட்டு பூஜை அறையில் சாமிக்கு என நெய்வேத்தியம் படைத்தால் அதனை அன்றே எடுத்து விட வேண்டும். நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று அப்படியே விடக்கூடாது. ஒரு ஆப்பிள் பழமோ அல்லது வாழைப்பழமோ ஏதேனும் ஒன்றை மட்டும் படைத்து நெய்வேத்தியம் செய்கிறோம் என்றால் அதனை அடுத்த நாள் காலையில் ஆவது எடுத்து விட வேண்டும். அவ்வாறு அல்லாமல் ஒரு சக்கரை பொங்கல் அல்லது பருப்பு சாதம் கொண்ட படையல் வைக்கிறோம் என்றால் அதனை ஒரு மணி நேரம் கழித்து எடுத்து விடலாம்.
2.) தீர்த்தம்:
நாம் எப்பொழுதும் சாமிக்கு நெய்வேத்தியம் செய்யும் பொழுதோ அல்லது ஏதேனும் ஒரு பூஜை செய்கிறோம் என்றால் மட்டுமே பஞ்சபாத்திரத்தில் தீர்த்தம் வைத்து வழிபாடு செய்கிறோம். ஆனால் தீர்த்தம் என்பதனையும் தினமும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். நாம் தினமும் பஞ்ச பாத்திரத்தில் தீர்த்தம் வைத்து அதில் ஒரு பூவினையோ அல்லது துளசியையோ போட்டு வழிபாடு செய்ய வேண்டும். அந்த தீர்த்தத்தினை அடுத்த நாள் பூஜை செய்யும் பொழுது கண்டிப்பாக மாற்றி விட வேண்டும்.
3.) கோலம்:
பூஜை அறையில் காலம் போடுவது என்ற பழக்கம் சிலருக்கு மட்டுமே உள்ளது. ஆனால் பூஜை அறையில் சிறியதாகவாவது ஒரு கோலத்தினை போட வேண்டும். அந்தக் கோலத்தினை தினந்தோறும் சுத்தம் செய்து மாற்றி வேறு கோலத்தினை போட வேண்டும்.
4.) மலர்கள்:
இன்று பலரும் வெள்ளி, சனி, செவ்வாய் போன்ற வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் மட்டுமே சாமிக்கு பூ போட்டு வழிபாடு செய்கிறார்கள். அதனையும் அடுத்த வாரத்தில் தான் சுத்தமும் செய்கிறார்கள். அவ்வாறு காய்ந்து போன மலர்களை பூஜையறையில் அப்படியே விடக்கூடாது. பூஜை அறையானது எப்பொழுதும் தெய்வீகத் தன்மையுடனும், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.
உதாரணமாக இப்போது வெள்ளிக்கிழமை அன்று பூ வைத்து சாமிக்கு வழிபாடு செய்த பின்னர் அதனை சனிக்கிழமை காலையில் சுத்தம் செய்து விட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சாமிக்கு பூ போட்டாலும் அதனை அடுத்த நாளே எடுத்து விட வேண்டும். காய்ந்த பூவை பூஜை அறையில் விடக்கூடாது. மற்ற விஷயங்களை காட்டிலும் இந்த நான்கு பொருட்கள்தான் பூஜை அறையில் அன்றாடம் மாற்றி விடக் கூடிய முக்கியமான பொருளாக உள்ளது. அப்பொழுது தான் நமது வீட்டில் எப்பொழுதும் நேர்மறையான எண்ணமும், புத்துணர்ச்சியும் பரவி இருக்கும்.